ஒரு பெண் எப்போது மகளிர் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும்

Nov 28, 2024

ஒரு பெண் எப்போது மகளிர் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும்பெண்கள் 13 முதல் 15 வயதிற்குள் தங்கள் முதல் மகளிர் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும் என்று அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகளிர்நல மருத்துவர்கள் கல்லூரி (ACOG) பரிந்துரைக்கிறது. அதன் பிறகு, "வெல்-வுமன் செக்அப்" என்றும் அழைக்கப்படும் வருடாந்திரப் பரிசோதனைகளை செய்து கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பொதுவாக, மகளிர்நல மருத்துவருடனான முதல் சந்திப்பு ஒரு அறிமுகமாக மட்டுமே அமையும். அத்துடன், பொதுவான உடல்நல  ஆலோசனை, மற்றும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதைப் பற்றிய விவாதம் ஆகியவை இருக்கும். 

இந்தச் சந்திப்பு பின்வரும் நன்மைகளை விளைவிக்கும்: 

மருத்துவர்-நோயாளி நல்லுறவை ஏற்படுத்துதல் 

இளமைப் பருவத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ள குழந்தைகளுடன் பேசுவதில் குழந்தை மற்றும் இளம்பருவ மகளிருக்கான மருத்துவ நிபுணர்கள் (Paediatric gynaecologists) சிறப்புப் பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ளனர். மாதவிடாய், பாலியல் செயல்பாடு மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு போன்றவைகளைப் பற்றி பெற்றோர்கள், பாதுகாவலர்கள் அல்லது மற்ற பெரியவர்களிடம் பேச இளம் மற்றும் பதின்மவயதினர் எப்போதும் சௌகரியமாக உணர்வதில்லை. அதனால் நண்பர்கள் அல்லது இணையத்தில் இருந்து தவறான தகவல்களை அவர்கள் பெற இது வழிவகுக்கிறது.

மகளிர்நல மருத்துவருடன் நல்ல, நம்பகமான உறவை ஏற்படுத்திக் கொள்வது, பதின்மவயதினர் மற்றும் இளம்வயதினருக்கு தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பதற்கு வசதியாக இருக்கும். அவர்களின் கேள்விகளுக்கான துல்லியமான பதில்களைப் பெறக்கூடிய அமைப்பை ஆரம்பத்திலேயே ஏற்படுத்திக் கொள்வதால், அவர்கள் தொடர்ந்து முதிர்ச்சியடையும் போதும் இது அவர்களுக்கு உதவும். எடுத்துக்காட்டாக, எதிர்காலத்தில் அவர்களுக்கு ஒரு அவசரகால உடல்நலப் பிரச்சினைக்கு பரிசோதனை தேவைப்படும் பட்சத்தில், மகளிர்நல மருத்துவருடனான நல்லுறவு, பரிசோதனை குறித்த அவர்களின் கவலையைக் குறைக்கலாம்.

தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சுகாதாரக் கல்வி 

முதல் வருகையானது பதின்ம வயதினருக்கும், இளம் வயதினருக்கும் கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் வயதுக்கேற்ற முக்கியமான தகவல்களை வழங்குவதற்கான வாய்ப்பையும் மகளிர்நல மருத்துவருக்கு வழங்குகிறது.

முதல் வருகையின் போது பின்வரும் பொதுவான தலைப்புகள் விவாதிக்கப்படலாம்:

  • அடிப்படை சுகாதாரம்

  • இயல்பான மற்றும் அசாதாரண யோனி வெளியேற்றம்

  • பருவமடைதல்

  • மாதவிடாய்

உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகள் 

பதின்ம வயதினரின் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து, மகளிர்நல மருத்துவர் பின்வருவனவற்றை செய்யலாம் அல்லது அது குறித்த ஆலோசனை வழங்கலாம்:

• உடல் மற்றும் உணர்ச்சிகளின் வளர்ச்சி குறித்த விவாதம்.

• மருத்துவ வரலாற்றை மதிப்பாய்வு செய்தல்.

• அடிப்படை இடுப்புப் பரிசோதனை மற்றும்/அல்லது மார்பகப் பரிசோதனை.

• ஏதேனும் அறிகுறிகள் அல்லது பிற பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்கான தீர்வுகளை வழங்குதல்.


Also Read: Premenstrual Syndrome - Understanding and Dealing with It


மாதவிடாய் சுழற்சியைப் புரிந்துகொள்வது 

பெரும்பாலான பதின்ம வயதினர் 12 மற்றும் 14 வயதுக்குள் பருவம் அடைகின்றனர்.

ஆனால், உங்களுக்கு 17 வயது ஆகி மற்றும் மார்பக வளர்ச்சி போன்ற பருவமடைதலின் பிற அறிகுறிகள் இருந்து, ஆனால் இன்னும் மாதவிடாய் வரவில்லை என்றால், நீங்கள் மகளிர்நல மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முதல் கருப்பை கோளாறுகள் வரை, இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மருத்துவர் ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு கவனமாக ஆராய்ந்து முடிவெடுப்பார்.

குழந்தை மற்றும் இளம்பருவ மகளிர்நல மருத்துவரிடம் செல்வது, பதின்மவயதினர் மற்றும் இளம் வயதினருக்கு மாதவிடாய்ச் சுழற்சி மற்றும் இயல்பான அல்லது அசாதாரண நிலைகள் ஆகியவற்றைப் பற்றி அறிய உதவும். சில நேரங்களில், பின்வருவன போன்ற சிக்கல்களுக்கு தீர்வுகாண இது ஒரு வாய்ப்பாக அமையலாம்:

• அதிகமான அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இரத்தப்போக்கு

• வலிமிகுந்த மாதவிடாய்ப் பிடிப்புகள்

• மாதவிடாய் முன்நோய்க்குறி (PMS) அல்லது மாதவிடாய்க்கு முன்பான டிஸ்ஃபோரிக் கோளாறு (PMDD)

HPV தடுப்பூசி 

பதின்ம வயதினர் மற்றும் இளம் வயதினர் தங்கள் மகளிர்நல மருத்துவரிடம் HPV தடுப்பூசியைப் பெறலாம். HPV தடுப்பூசி, இளம் பருவத்தினரை, ஆறு வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் மனித பாப்பிலோமா வைரஸிலிருந்து (HPV) பாதுகாக்க உதவுகிறது.

HPV தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்: முதல் டோஸ் 11 முதல் 12 வயது வரை, இரண்டாவது டோஸ் அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு. 

பாலியல் கல்வி 

பாலுறவு பற்றி பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது தனக்குத் தெரிந்த பிற பெரியவர்களிடம் பேசுவது இளம் பருவத்தினருக்கு கூச்சமாகவும், கடினமாகவும் இருக்கலாம். ஆனால், சரியான தகவல்களை வழங்கக்கூடிய ஒருவருடன் இந்த உரையாடல்களை நடத்த அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பது மிகவும் அவசியம். இத்தகைய கேள்விகளுக்கு குழந்தை மற்றும் இளவயது மகளிர்நல மருத்துவரால் பதிலளிக்க முடியும், அத்துடன் பின்வரும் தலைப்புகள் குறித்த தகவல்களையும் அவர்களால் வழங்க முடியும்:

• பாலியல்-ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள்

• பிறப்புக்கட்டுப்பாடு மற்றும் கருத்தடை.

• பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நெருக்கமான உறவுகள்

• பாலின அடையாளம்

• LGBTQ+ தலைப்புகள்

• முதல் முறையாக உடலுறவு கொள்வது

 


தொடர்புடைய வலைப்பதிவு: மகளிர்நல மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளிலான முன்னேற்றங்கள்


மகளிர் நோய்களுக்கான நோய்கண்டறிதல் மற்றும் சிகிச்சை 

பின்வரும் துறைகளில் பயிற்சி பெற்ற குழந்தை மற்றும் இளம்பருவ மகளிர்நல மருத்துவர்களால், குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்:

• சிக்கலான நாட்பட்ட மகளிர் நோய்கள்

• உடல்நல அல்லது மனநல குறைபாடுகள், டவுன் சிண்ட்ரோம் அல்லது பெருமூளை வாதம்

• பிறவி அசாதாரணங்கள் (பிறந்ததிலிருந்து இருக்கும் மருத்துவப் பிறழ்ச்சிகள்)

பதின்ம மற்றும் இளம் பருவத்தினருக்கு ஒரு மகளிர்நல மருத்துவரை முதன்முறையாக சந்திப்பது குறித்து பதட்டம் அல்லது பயம் இருக்கக்கூடும், அல்லது அவர்களின் முதல் இடுப்புப் பரிசோதனை அல்லது மார்பகப் பரிசோதனை போன்றவை குறித்து சங்கோஜம் இருக்காலாம்; இது பொதுவாக ஏற்படுவது தான். 

மகளிர்நல மருத்துவரை முதன்முறையாக சந்திக்கும் அனுபவத்தை முடிந்தவரை நல்லவிதமாக ஆக்குவதும், இளம் வயதிலிருந்தே முறையான ஆரோக்கியம் மற்றும் தடுப்புப் பராமரிப்பு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் நன்மைகளைப் புரிந்துகொள்ள பதின்வயதினர்களுக்கு உதவுவதுமே மகளிர்நல மருத்துவர்களின் நோக்கமாகும்.

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved