எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) என்பது நமது செரிமான அமைப்பைப் பாதிக்கும் அறிகுறிகள் ஆகும். இது மக்களிடையே பரவலாகக் காணப்படும் ஒரு இரைப்பை-குடல் நோய், இது சுமார் 15% மக்களை பாதிக்கிறது என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஐபிஎஸ் வகைகள்
ஐபிஎஸ் உள்ள பெரும்பாலான மக்களுக்கு சில நாட்கள் குடல் இயக்கம் சாதாரணமாக இருக்கும், வேறு சில நாட்கள் அசாதாரணமாக இருக்கும். அந்த அசாதாரண இயக்கத்தை வைத்துத் தான் ஐபிஎஸ்-இன் வகை வரையறுக்கப்படுகிறது.
ஐபிஎஸ் அறிகுறிகள்
ஐபிஎஸ்-இன் அறிகுறிகள் பின்வருமாறு:
ஐபிஎஸ் எதனால் ஏற்படுகிறது
இதற்கான சரியான காரணம் அறியப்படவில்லை, ஆனால் இது ஒரு நரம்பு-இரைப்பைக்குடல் (GI) கோளாறு என்று கருதப்படுகிறது. அதாவது செரிமான அமைப்பு நன்றாகச் செயல்பட குடலும் மூளையும் ஒருங்கிணைந்து இயங்க வேண்டும், அதில் சிக்கல் ஏற்படுவது ஐபிஎஸ்-க்கான காரணம் என்று கருதப்படுகிறது.
இரைப்பைக்குடல் பாதையில் ஏற்படும் பாக்டீரியா மாற்றங்கள், கடுமையான தொற்று, சில உணவுகளுக்கான ஒவ்வாமை, குழந்தை பருவத்தில் ஏற்பட்ட கடுமையான உடல், பாலியல் மற்றும் உணர்ச்சி துஷ்பிரயோகம் தொடர்பான அழுத்தங்கள் போன்றவை ஐபிஎஸ்-க்கான பிற சாத்தியமான காரணங்கள் ஆகும்.
ஐபிஎஸ் தூண்டுதல்கள்
ஐபிஎஸ் அறிகுறிகளை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும் பொதுவான தூண்டுதல்கள் பின்வருமாறு:
ஐபிஎஸ் நோய்கண்டறிதல் மற்றும் அதற்கான சோதனைகள்
ஐபிஎஸ்-ஐக் கண்டறிவதற்கான முதல் படி விரிவான மருத்துவ வரலாறு ஆகும். உங்கள் மருத்துவர் உங்கள் அறிகுறிகளைப் பற்றி கேட்பார், மேலும் அதன் அடிப்படையில் உங்களுக்கு பிற சோதனைகள் செய்யப்படலாம். சோதனைகள் உங்கள் ஐபிஎஸ்-ஐ கண்டறிவதற்காக அல்ல, வேறு நிலைமைகளை கண்டறிந்து அவற்றை விலக்குவதற்காக அவை செய்யப்படுகின்றன.
உங்களுக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய தொற்று, சில உணவுகளுக்கான ஒவ்வாமை அல்லது வேறு செரிமானப் பிரச்சினைகள் போன்றவற்றைக் கண்டறிந்து விலக்குவதற்காக இரத்தப் பரிசோதனை, மலப் பரிசோதனை மற்றும் ஹைட்ரஜன் சுவாசப் பரிசோதனை போன்ற ஆய்வக சோதனைகள் செய்ய வேண்டியிருக்கலாம்.
உங்கள் இரைப்பைக்குடல் பாதையில் வீக்கம் அல்லது அசாதாரண வளர்ச்சிகள் சம்பந்தப்பட்ட நிலைமைகளை கண்டறிந்து விலக்குவதற்காக கொலோனோஸ்கோப்பி, சிக்மாய்டோஸ்கோப்பி, அப்பர் எண்டோஸ்கோப்பி போன்ற இமேஜிங் நடைமுறைகள் செய்ய தேவைப்படலாம்.
ஐபிஎஸ் சிகிச்சைமுறை மற்றும் மேலாண்மை
குறிப்பிட்ட சிகிச்சைமுறை என்று எதுவும் இல்லை. உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் தினசரி செயல்பாட்டு வழக்கம் ஆகியவற்றில் சில மாறுதல்களைச் செய்வது உதவிகரமாக இருக்கும். மேலும் மருந்துகள் மற்றும் நடத்தை-மற்றும்-உளவியல் சார்ந்த சிகிச்சை ஆகியவை உதவக்கூடும்.
ஐபிஎஸ்-க்கென பிரத்தியேக சிகிச்சைமுறை எதுவும் இல்லை. பொதுவாக, தினசரி உண்ணும் உணவுகள் மற்றும் செயல்பாடுகளில் சில மாறுதல்கள் செய்வது காலப்போக்கில் உங்கள் நிலைமையை மேம்படுத்தும்.