பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடலின் ஒரு பகுதியான “கோலனில்” (colon) தொடங்கும் செல்களின் வளர்ச்சியாகும். கோலன் என்பது செரிமான அமைப்பின் கடைசிப் பகுதியான பெருங்குடலின் முதல் பகுதியாகும், இது மிக நீளமானதும் கூட.
பெருங்குடல் புற்றுநோய் பொதுவாக வயதானவர்களைப் பாதிக்கிறது, இருப்பினும் இது எந்த வயதிலும் ஏற்படலாம். இது வழக்கமாக பெருங்குடலுக்குள் உருவாகும் “பாலிப்” எனப்படும் சிறிய செல் கட்டிகளாகத் தொடங்குகிறது. பாலிப்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை, இதன் காரணமாகவே மருத்துவர்கள் வழக்கமான பரிசோதனைகளைப் பரிந்துரைக்கின்றனர் ஏனென்றால் இவை பாலிப்களை முன்கூட்டியே கண்டறிந்து அகற்ற உதவுகின்றன.
பெருங்குடல் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் சிகிச்சைகளில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் மருந்துகள், கீமோதெரபி, இலக்கு சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை ஆகியவை அடங்கும்.
பெருங்குடல் புற்றுநோய் பரம்பரையானதா?
உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருந்தால், அது உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் வேறு ஒருவருக்கோ ஏற்படுமா என்று சிந்திப்பது இயல்பானது தான்.
பெருங்குடல் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக இருந்தாலும், இவை பெரும்பாலும் பரம்பரையாக ஏற்படுவதில்லை. பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு, அவர்களின் குடும்பத்தில் இந்நோய் இருந்ததற்கான வரலாறு இல்லை. மாறாக, இந்தப் புற்றுநோய்கள் பொதுவாக, தற்செயலாக நிகழும் மரபணு மாற்றங்களாலேயே (பிறழ்வுகள்) உருவாகின்றன.
உடல் செயல்பாடு, உணவுமுறை மற்றும் புகைப்பிடித்தல் போன்ற வாழ்க்கைமுறை காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன.
பரம்பரை(ஹெரிடிட்டரி) அல்லது மரபணு- சார்ந்தது(ஜெனிடிக்) ஆகியவற்றுக்கு இடையே என்ன வேறுபாடு?
பெரும்பாலான பெருங்குடல் புற்றுநோய்கள் மரபணு மாற்றங்களுடன் தொடர்புடையவை, ஆனால் இந்த மாற்றங்கள் பரம்பரையாக வருபவை அல்ல. மாறாக, செல்கள் தொடர்ந்து வளர்ந்து பிரிவதால், அவை காலப்போக்கில் உருவாகின்றன. சுமார் 75% பெருங்குடல் புற்றுநோய்களில் பரம்பரை நோய்க்கான எந்த ஆதாரமும் இருப்பதில்லை.
எனது குடும்ப மருத்துவ வரலாற்றில் பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயம் இருப்பது என்னை எவ்வாறு பாதிக்கும்?
உங்கள் குடும்ப வரலாற்றை அறிந்துகொள்வது, உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் கணக்கிட பெரிதும் உதவும். பாதிக்கப்பட்டவர் உங்களுடைய பெற்றோர், உடன்பிறந்தவர் அல்லது குழந்தை போன்ற முதல்-நிலை உறவினராக இருக்கும் பட்சத்தில், இந்த அபாயம் பொதுவாக உங்களுக்கு சராசரியை விட சுமார் 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கலாம்.
பின்வரும் சில அறிகுறிகள்அதிக ஆபத்தை உணர்த்தலாம்:
எந்த பரம்பரை நோய்த்தொகுப்புகள் (ஸிண்ட்ரோம்) பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன?
பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும் சில பரம்பரை நோய் நிலைகள் உள்ளன, அவற்றுள் சில இதோ:
என் குடும்பத்தில் பெருங்குடல் புற்றுநோய்க்கான வரலாறு இருக்கும் பட்சத்தில், அதிலிருந்து என்னை நான் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம்?
முன்பரிசோதனைகளின் முடிவுகள் உறுதி செய்யப்பட்ட பிறகு, மருத்துவர்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மைக்கான உத்திகளை வகுப்பார்கள். இவற்றில் பின்வருவன அடங்கும்:
வாழ்க்கைமுறை மாற்றங்கள் பரம்பரை பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைக்க உதவுமா?
உங்களுக்கு மரபணுரீதியான அபாயம் இருந்தாலும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உங்கள் ஒட்டுமொத்த அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும்.
பயனுள்ள வழிமுறைகளில் அடங்குபவை:
இந்தக் காரணிகள் பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. முன்பரிசோதனை(ஸ்க்ரீனிங்) செய்து கொள்வது பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதற்கான மிகவும் பயனுள்ள வழியாகும், ஏனென்றால் இதன் மூலம் பாலிப்களை முன்கூட்டியே கண்டறிந்து அகற்ற முடியும்.
இறுதியாக சில வார்த்தைகள்…
சில சமயங்களில் பெருங்குடல் புற்றுநோய் பரம்பரையாக ஏற்படும் என்றாலும், பெரும்பாலானவை பரம்பரை மரபணு மாற்றங்களால் ஏற்படுவதில்லை.
உங்கள் குடும்பத்தின் மருத்துவ வரலாற்றைத் தெரிந்து கொள்ளுதல் உங்களுக்கான ஆபத்தைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது. இந்தத் தகவல்களை உங்கள் மருத்துவருடன் பகிர்ந்து கொண்டால், பரிசோதனைகள் மற்றும் மரபணுச் சோதனைகள் தொடர்பான முடிவுகளை வழிநடத்த அவருக்கு உதவியாக இருக்கும். ஆகவே தகவல்களைத் தெரிந்து கொள்வதும், பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்வதும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நீங்கள் எடுக்கக்கூடிய முக்கியமான நடவடிக்கைகளாகும்.