இதய நோய்கள் என்றால் என்ன?
“இதய நோய்” மற்றும் “கார்டியோவாஸ்குலர் நோய்” ஆகிய சொற்கள் இதயத்தை பாதிக்கும் நோய்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பின்வருவன அடங்கும்:
இந்த நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், அவற்றை நன்கு நிர்வகித்து நாம் இயல்பான வாழ்க்கை வாழ முடியும், இல்லையென்றால் இந்த நிலைமைகள் தீவிரமடைந்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.
ஆரம்பகட்ட நோய்கண்டறிதலினால் என்ன நன்மை?
இதய நோய்கள் படிப்படியாக முன்னேறும் தன்மை கொண்டவை – அதாவது அவை சிறிய அளவில் தொடங்கி காலப்போக்கில் படிப்படியாக மோசமாகின்றன. இதய நோயை முன்கூட்டியே கண்டறிவதால், அதன் விளைவாக ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கலாம்.
ஆரம்பகட்ட நோய்கண்டறிதல் ஏன் முக்கியம் என்பதற்கான காரணங்கள் இதோ:
- ஆரம்பகட்ட சிகிச்சை – ஆரம்பகட்டத்திலேயே இதய நோயை கண்டறியும்போது, அந்த கட்டத்தில் உடலுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறைந்த அளவில் இருக்கும். இதயத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எளிதில் சமாளிக்கக்கூடியதாக இருக்கும், மேலும் வழக்கமான, ஊடுருவல்-அல்லாத சிகிச்சைமுறைகள் மூலம் திறம்பட சிகிச்சையளிக்க முடியும். மேலும், நோயின் வளர்ச்சியை தாமதப்படுத்தவும், அதை மாற்றியமைக்கவும் (ரிவர்ஸ்) கூட இது உதவுகிறது. ஆரம்பகட்டங்களில் நோயைக் கண்டறியும் போது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்துவது மிகவும் சுலபம்.
- ஊடுருவல்-அல்லாத சிகிச்சை – இதய நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நோயாளிக்கு ஊடுருவல்-அல்லாத சிகிச்சைகள் வழங்க முடியும், இவை நோயின் ஆரம்ப கட்டங்களில் சிறந்த பலன் அளிக்கும். அறுவை சிகிச்சையை விட மருந்து, உணவுமுறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம் நோயாளிக்கு சிகிச்சையளிப்பது நிச்சயமாக விரும்பத்தக்கது. அறுவை சிகிச்சையானது நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கலாம், மேலும் அவர்களுக்கு இணை நோய்கள் மற்றும் தொடர்புடைய தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- சிக்கல்களைத் தடுத்தல் – ஆரம்பகட்டத்திலேயே நோய் கண்டறிப்படும் போது நமக்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க போதுமான நேரம் கிடைக்கிறது. நோய் மேலும் முன்னேறி தீவிரம் அடையும் முன், நோயாளிகளுக்கு இதயச் செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் முன், அதைத் தடுக்க அவர்கள் தங்களின் வாழ்க்கை முறையை எப்படி மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தலாம். உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை மாற்றங்களை அவர்கள் தொடர்ந்து முறையாக பின்பற்றினால் நோய் முன்னேற்றத்தை தடுக்கலாம்.
- முன்கணிப்பு – ஆரம்பகட்ட நோயறிதலுக்கு உட்படும் நோயாளிகளுக்கு ஆரம்பகால சிகிச்சை அளிக்கப்பட்டால், அவர்கள் தொடர்ந்து “இயல்பான” வாழ்க்கை வாழலாம். அசௌகரியம் ஏதும் இல்லாமல் சமூக செயல்பாடுகளில் பங்கேற்கலாம், அத்துடன் யாரையும் சார்ந்து இருக்காமல் சுயமாக செயல்படலாம். ஆகவே இதய நோய் சிகிச்சையளிக்கக்கூடிய ஒன்று என்பதை நாம் அறிய வேண்டும். பெரும்பாலான நோயாளிகள் நல்ல குணமடைந்து நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
- மேலும் சிறப்பான மேலாண்மைத் திட்டம் – இதய நோயைப் பொறுத்தவரை, “காலம் பொன்னானது”. மாரடைப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் உள்ள ஒருவருக்கு சில நிமிடங்கள் என்பது வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் தருணமாகும். ஆரம்பகட்டத்தில் நோயை கண்டறிவதால், அவசரகால நெருக்கடி இல்லாமல் நோயாளியின் நிலையைப் பற்றி மருத்துவர்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு மிகவும் விரிவான, தனிப்பயனாக்கப்பட்ட மேலாண்மைத் திட்டத்தை உருவாக்க இது உதவுகிறது. மேலாண்மைத் திட்டத்தின் குறிக்கோள் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் சேதத்தை நிர்வகிப்பது மட்டுமல்ல, இதயத்திற்கும், அதைத் தொடர்ந்து பிற முக்கிய உறுப்புகளுக்கும் மேலும் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதும் ஆகும்.
- சிகிச்சைக்கான செலவுகள் குறைகின்றன – ஆரம்பகட்ட சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவை விட அவசரகால மருத்துவ பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு ஆகும் செலவு மிக அதிகம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. மேலும் அவசரகால மருத்துவ நெருக்கடிக்கு ஆகும் கூடுதல் செலவுகள் நோயாளியை அச்சுறுத்தி, மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம், அதனால் ஆரம்பகட்ட நோய் கண்டறிதல் அதைத் தவிர்க்க உதவுகிறது.
இந்தியாவில் இதய நோயின் பரவல்
இந்தியாவில் உடலுறுப்பு செயலிழப்பு மற்றும் அதைத் தொடர்ந்த இறப்புக்கு மக்கள் ஆளாவதற்கு இதய நோய்கள் ஒரு முக்கிய காரணமாகும். இது அமைதியாகக் கொல்லக்கூடிய ஒரு கொடிய நோயாகும். மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்களுக்கு இதய நோய்களுக்கான ஆபத்து அதிகம், மேலும் இது இளம் வயதிலேயே தொடங்குவதையும் நாம் பார்க்கிறோம்.
இதய நோய்கள் ஏற்படும் போது இதயத்தினால் இரத்த ஓட்டம் மூலம் உடல் முழுவதற்கும் ஆக்ஸிஜனை வழங்க முடிவதில்லை, அதனால் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்கள் இறக்கத் தொடங்குகின்றன, அதன் விளைவாக முக்கிய உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுகிறது. கண்டறியப்படாத மற்றும் சிகிச்சையளிக்கப்படாத இதய நோய்களின் காரணமாக இதய தசைகள் பலவீனமடைந்து சேதம் அடைகின்றன. இது அறிகுறி ஏதும் இல்லாமல், அமைதியாக ஏற்படுவதால், பார்க்க “ஆரோக்கியமாக” இருக்கும் ஒருவர் கூட இதய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் முறையாக உடல்நலப் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். இதய நோயை விரைவில் கண்டறிந்தால், தீவிரமான அல்லது உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்கலாம்.
மக்கள் ஆரம்பகட்ட நோயறிதல் மேற்கொள்வதை நாம் எப்படி உறுதி செய்வது?
ஆரம்பகட்ட நோயறிதல் என்பது இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும். இப்போது, 35 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கூட, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை காரணமாக இதய நோய்கள் ஏற்படுகின்றன. ஆகவே எல்லோரும் வருடாந்திர உடல்நல பரிசோதனைகள் செய்து கொள்வதை உறுதி செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும். இதய நோயின் எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிய இது உதவும். பல சந்தர்ப்பங்களில், நோய் முன்னேற்றத்தை தடுக்கவும் இது உதவலாம். வாழ்க்கைமுறை மாற்றங்கள் உட்பட, உங்கள் மருத்துவர் உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட உடல் நல ஆலோசனை வழங்குவார்.
உங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள் – வருடாந்திர உடல் நல பரிசோதனைகளை மேற்கொண்டு, இதய நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்திடுங்கள்!