தூக்கக் கோளாறுகள் என்பது நம் உடலுக்குத் தேவையான தூக்கத்தை பாதிக்கும் நிலைமைகள், அதாவது நாம் எவ்வளவு நன்றாக தூங்குகிறோம்(தரம்), எப்போது தூங்குகிறோம் (நேரம்), மற்றும் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் (கால அளவு) போன்றவற்றை பாதிக்கும் நிலைமைகள்.
தூக்கக் கோளாறுகள் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். நாம் செய்ய விரும்பும் விஷயங்களைச் செய்யவோ அல்லது நமது தினசரி வழக்கமான செயல்களை செய்யவோ கூட நமக்கு சக்தி இல்லாமல் போகலாம். நம் வாழ்வின் முக்கியமான அல்லது சிறப்பான தருணங்கள் அல்லது நிகழ்வுகளை இழக்க இவை ஒரு காரணமாக அமையலாம். மேலும், இதன் காரணமாக நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து விளையலாம், குறிப்பாக சரியான தூக்கம் இல்லாமல் நாம் வாகனம் ஓட்டும் பொழுதோ அல்லது கனரக இயந்திரங்களை இயக்கும் பொழுதோ.
தூக்கக் கோளாறுகள் ஏற்படக் காரணம் என்ன?
நம் உடலின் தூக்கச் சுழற்சியில் ஏற்படும் இடையூறு காரணமாக தூக்கக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதற்கான காரணங்களில் பின்வருவன அடங்கும்:
தூக்கக் கோளாறுகளின் அறிகுறிகள் என்ன?
தூக்கக் கோளாறுகளின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
இரவில் போதுமான தூக்கம் இல்லாத காரணத்தால் பகல் நேரத்தில் சில அறிகுறிகள் ஏற்படலாம், அதில் பின்வருபவை அடங்கும்:
இரவில் போதுமான தூக்கம் இல்லை என்றால் என்ன ஆகும்?
நம் உடலுக்குத் தேவையான அளவிலோ அல்லது தரத்திலோ தூக்கம் கிடைக்கவில்லை என்றால், அது பகல்நேர சோர்வாக வெளிப்படும், அத்துடன் சில சமயம் அதையும் தாண்டி நம் உடலையும் செயல்பாடுகளையும் அது பாதிக்கும். போதுமான அளவு தூக்கம் இல்லாதது பின்வருவனவற்றிற்கு வழிவகுக்கும்:
தூக்கக் கோளாறுகள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன?
அறிகுறிகளுக்கு என்ன காரணம் என்பதைப் பற்றி அறிய மருத்துவர் முதலில் ஒரு கலந்துரையாடல் மற்றும் உடல் பரிசோதனை செய்வார். மேலும் ஆராய விரும்பினால் இரத்தப் பரிசோதனைகள் அல்லது இமேஜிங் சோதனைகளை செய்யும்படி அவர் பரிந்துரைக்கலாம்.
ஒரு தூக்க நாட்குறிப்பை வைத்திருக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தலாம். “தூக்க நாட்குறிப்பு” என்பது நம் தூக்கப் பழக்கங்களின் பதிவாகும். நாம் எப்போது படுக்கைக்குச் செல்கிறோம், எப்போது தூங்குகிறோம், எப்போது எழுந்திருக்கிறோம் போன்றவற்றை நாம் இதில் பதிவு செய்ய வேண்டும். நமது பகல் நேர தூக்கத்தையும் இதில் குறிப்பிட வேண்டும். அத்துடன், தூங்குவதற்கு முன்னும் பின்னும் நாம் எப்படி உணர்ந்தோம் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
மேலாண்மை மற்றும் சிகிச்சை
பல்வேறு தூக்கக் கோளாறுகளுக்கு பல வகையான சிகிச்சை விருப்பங்கள் உள்ளன, அவற்றில் பின்வருவன அடங்கும்:
தூக்க மேலாண்மை – நல்ல தூக்கத்திற்கான வழக்கத்தை ஏற்படுத்துதல்
நாம் தூங்கும் முறையில் சில மாற்றங்களைச் செய்யும்படி மருத்துவர் பரிந்துரைக்கலாம். “தூக்க சுகாதாரம்” என்பது நமக்கு உகந்த தூக்க சூழலை உருவாக்க நமது தூக்க வழக்கத்தில் நாம் செய்யும் சில மாற்றங்கள் ஆகும்.
கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே அவ்வப்போது தூக்கப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் தொடர்ச்சியாக இரவில் தூங்குவதற்கு சிரமப்படும் பட்சத்திலோ அல்லது முந்தைய இரவு குறைந்தது ஏழு மணிநேரம் தூங்கியிருந்த பின்னரும் பகலில் சோர்வாக உணர்ந்தாலோ, அதற்குக் காரணம் தூக்கக் கோளாறாக இருக்கலாம். கவலை வேண்டாம், உடனடியாக மருத்துவரை அணுகி தக்க சீர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், விரைவில் மீண்டு வர கண்டிப்பாக வாய்ப்புள்ளது.