மருத்துவத் துறையில் “கோல்டன் ஹவர்” என்ற சொல் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. துயர சம்பவங்களினால் நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு 60 நிமிட காலத்திற்குள் சிகிச்சையளிக்கப்பட வேண்டியது முக்கியம். இந்த முக்கியமான காலக்கெடுவிற்குள் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுடன், அவர்களின் உடல்சார் செயல்பாடுகளும் பழைய நிலைக்கு மீண்டு வர வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்திற்குள் நோயாளிகள் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீண்டகால சிக்கல்கள் மற்றும் இறப்புக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். “கோல்டன் ஹவர்” என்ற கருத்து…
Read Moreஉங்கள் இதயத்தை கவனித்துக் கொள்ளுங்கள்!
இதயம் என்பது மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இரத்தத்தை செலுத்துவதன் மூலம் வழங்க அயராது இயங்குகிறது. இது, செல்களிலிருந்து கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுகளை அகற்றி, அவற்றை கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு அனுப்புகிறது, அங்கிருந்து அவை உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இரத்த சுற்றோட்ட அமைப்பின் மையத்தில் இடம்பெற்றிருக்கும் இதயம், உடல் செயற்பாடுகள் நன்கு அமைந்து நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறது….
Read Moreபருவகால ஒவ்வாமைகள் மற்றும் அதைத் தடுக்கும் வழிகள்
ஒரு பொருளை உங்கள் உடல் எதிர்கொள்ளும் போது, அதற்கு உடல் அளிக்கும் நோயெதிர்ப்பு எதிர்வினை “ஓவ்வாமை (ஆலர்ஜி)” எனப்படுகிறது. அப்படிப்பட்ட பொருட்கள் “ஒவ்வாமை அளிக்கும் பொருட்கள் (அலர்ஜென்)” எனப்படுகின்றன. மகரந்தம், தேனீ விஷம் மற்றும் பூனை முடி ஆகியவை சில பொதுவான ஒவ்வாமை அளிக்கும் பொருட்கள் ஆகும். சில சமயம் சில உணவுகள் அல்லது மருந்துகளினால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். இதன் விளைவாக வீக்கம் அல்லது அரிப்பு எதிர்வினை ஏற்படலாம். ஒவ்வாமையின் தீவிரம் எல்லோருக்கும் ஒரே மாதிரி…
Read Moreமகளிர்நல மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளிலான முன்னேற்றங்கள்
மகளிர்நல மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அறுவைச்சிகிச்சை முறைகளில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் காரணமாக நோயாளியின் ஆரோக்கியமும், குணமடையும் நேரமும் மேம்பட்டுள்ளன. லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோ-உதவி கொண்டு செய்யப்படும் அறுவைச்சிகிச்சைகள் போன்ற குறைந்தபட்ச ஊடுருவும் தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், அதன் பக்க விளைவுகளும் குறைவு. ஹார்மோன் சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்ற நிலைமைகளுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சைகளை வழங்குகின்றன. குறைந்தபட்ச-ஊடுருவும் அறுவைச்சிகிச்சைச் தொழில்நுட்பங்கள் குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட அறுவைச்சிகிச்சை தொழில்நுட்பங்களான லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவைச்சிகிச்சை…
Read Moreநடைப்பயிற்சி ஒரு வரப்பிரசாதம்!
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி ஒரு சிறந்த வழி. இதயத் துடிப்பை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் இது ஒரு சிறந்த பயிற்சியாகும். நடைப்பயிற்சி மேற்கொள்ள பிரத்தியேக துணைப்பொருட்கள் எதுவும் தேவையில்லை; வாக்கிங் ஷூ அணிந்தால் சௌகரியமாக இருக்கும் ஆனால் அது கட்டாயமில்லை. உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களிலோ அல்லது உங்கள் வீட்டினுள் சுற்றியுள்ள தோட்டத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ கூட நடக்கலாம். துணைக்கு உங்கள் நண்பர்கள், குடும்பத்தார், அல்லது செல்ல நாயை அழைத்துக் கொள்ளலாம்; அல்லது…
Read More