கீழ் முதுகுவலி மீண்டும் வராமல் தடுக்க சில வாழ்க்கை முறை மாற்றங்கள்

Oct 20, 2023

கீழ் முதுகு வலி

கீழ் முதுகு வலி என்பது பரவலாக பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள். 2020-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகெங்கும் இதற்கான மிகவும் பொதுவான காரணம் ஒருவர் வேலையில்லாமல் செயல்பாடின்றி இருப்பதாகும். 

கீழ் முதுகு வலி திடீரென தோன்றலாம் அல்லது காலப்போக்கில் படிப்படியாக முன்னேறலாம். சில சமயம், எதையாவது தூக்குவதற்காக குனிவது போன்ற குறிப்பிட்ட அசைவுகள் கூட வலியைத் தூண்டலாம். வலி கூர்மையாகவோ அல்லது மந்தமாகவோ இருக்கலாம். விறைப்பு மற்றும் தசைப்பிடிப்புகள் (கூர்மையான, அதிக அளவிலான வலி அல்லது முதுகு தசைகளில் சுருங்கி விரிதல்) ஏற்படலாம். முதுகுவலி உள்ளவர்களுக்கு வழக்கமான தோரணையை பராமரிப்பதும் மற்றும் நேராக நிற்பதும் சிரமமாக இருக்கும். 

கீழ் முதுகு வலிக்கான காரணங்கள்

கீழ் முதுகு வலி பெரும்பாலும் ஒரு காயத்தின் விளைவாக ஏற்படலாம், அல்லது பின்வரும் காரணங்களால் ஏற்படலாம்:

 • திடீர் அசைவு அல்லது முறையற்ற அசைவுகளால் ஏற்படும் தசை சுளுக்கு அல்லது வலிகள்.
 • ஹெர்னியேட்டட் டிஸ்க் - முதுகுத்தண்டு எலும்புகளுக்கு இடையே உள்ள குஷன்-போன்ற மென்மையான பொருள் வெடித்து, முதுகுத் தண்டு அல்லது நரம்பு வேர்களை அழுத்தும் போது.
 • சியாட்டிகா - இது முதுகெலும்பை கால்களுடன் இணைக்கும் சியாட்டிக் நரம்பின் இறக்கம் ஆகும். இது கால் வீக்கம் அல்லது கால் வலியை ஏற்படுத்தும்.
 • ஸ்கோலியோசிஸ், லார்டோசிஸ் அல்லது கைபோசிஸ் போன்ற அசாதாரண முதுகெலும்பு வளைவுகள்
 • மோசமான தோரணை - உட்கார்ந்திருக்கும் தோரணை, நடைப்பயிற்சி மற்றும் மிக முக்கியமாக, தூங்கும் தோரணை ஆகியவை இதில் அடங்கும்.
 • கீல்வாதம் மற்றும் ஸ்பான்டைலிடிஸ் - மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் முதுகுத்தண்டு தொற்று
 • முதுகெலும்பு முறிவுகள்
 • சிறுநீரகத் தொற்று

தொடர்புடைய வலைப்பதிவு:  செர்விகல் ஸ்போண்டிலோசிஸ் – காரணங்கள் மற்றும் சிகிச்சை


நீங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக கீழ் முதுகு வலியை அனுபவித்தால், அதில் முன்னேற்றம் ஏதும் இல்லையென்றால், உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். கீழ் முதுகுவலிக்கு கூடுதலாக, கால்களில் பலவீனம், சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழத்தல், மூட்டுகளில் உணர்வின்மை அல்லது வலியின் அளவு திடீரென அதிகரித்தல் போன்றவை இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும். 

நோய்க் கண்டறிதல்

பொதுவாக நோயாளியின் மருத்துவ வரலாறு, உடற்பரிசோதனை, நரம்பியல் சோதனைகள் மற்றும் இமேஜிங் சோதனைகள் ஆகியவற்றில் சிலவற்றையோ அல்லது எல்லாவற்றையுமோ பயன்படுத்தி கீழ் முதுகுவலி கண்டறியப்படுகிறது. இதில் முதுகெலும்பு எக்ஸ்ரே, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எலும்பு அடர்த்தி ஸ்கேன் மற்றும் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் ஆகியவை அடங்கும். 

கீழ் முதுகு வலிக்கான சிகிச்சை

கீழ்முதுகு வலி லேசானதாக இருந்தால், பொதுவாக ஓய்வு எடுத்தல், ஐஸ் ஒத்தடம் மற்றும் ஓவர்-தி-கவுன்டர் வலி மருந்துகளால் (மருத்துவரின் சீட்டின்றி வாங்கும் மருந்துகள்) சரியாகிவிடும். இவை பொதுவாக, மோசமான தோரணை அல்லது முதுகின் தசைகள் அல்லது தசைநாண்களில் ஏற்படும் சிறிய காயத்தால் ஏற்படுபவை. சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, நீங்கள் மெதுவாக உங்கள் வழக்கமான, அன்றாட நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம். சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் உங்கள் உடற்தோரணையை மேம்படுத்திக் கொள்வது ஆகியவற்றின் மூலம் உங்கள் கீழ் முதுகை சரியான வழியில் குணப்படுத்தலாம். 

கீழ் முதுகு வலி மிகவும் தீவிரமாக இருந்தால், பொதுவாக வலியை விரைவாக நீக்குவதில் சிகிச்சைத் திட்டம் கவனம் செலுத்தும், அதன் பின்னர் அடிப்படைக் காரணத்தை நிவர்த்தி செய்யலாம். வலியைக் குறைக்க பெரும்பாலும் ஸ்டெராய்ட்ஸ்-அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஸ்டீராய்டு ஊசிகளும் பரிந்துரைக்கப்படலாம். 

ஃபிசியோதெரபி மற்றும் மசாஜ் ஆகியவை கீழ் முதுகு வலியைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதை உரிமம் பெற்ற நிபுணர்களிடம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஃபிசியோதெரபி உங்கள் தசைகளை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கவும் உதவும். முதுகெலும்பு இறக்கம் அல்லது சியாட்டிகா ஏற்பட்டால், அறுவை சிகிச்சை மூலம் அதைத் திருத்த மருத்துவர் பரிந்துரைக்கலாம். 

கீழ் முதுகுவலி மீண்டும் வராமல் தடுக்க, நீங்கள் செய்யக்கூடிய சில வாழ்க்கை முறை மாற்றங்கள் இதோ:

 • உடல்-ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள். உங்கள் தசைகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அவற்றை வழக்கமாகப் பயன்படுத்த வேண்டும். நல்ல வடிவமும் முக்கியம். முதுகு மற்றும் வயிற்றுப்பகுதியைப் வலுப்படுத்த உடற்பயிற்சியில் கவனம் செலுத்துங்கள்.
 • ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும். அதிக எடை இருந்தால் முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்பு வட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
 • சரியான உடற்தோரணையை மேற்கொள்ளவும். உட்காருதல், நடத்தல் மற்றும் தூங்குதல் ஆகியற்றுக்கு இது பொருந்தும். பக்கவாட்டில் முறுக்காமல், உங்கள் முதுகு மெத்தையில் படும்படி மல்லாக்காக  படுத்துத் தூங்க முயற்சி செய்யுங்கள். உங்கள் முதுகெலும்பு நடுநிலையில் இருக்க வேண்டும்.
 • நீங்கள் பொருட்களை தூக்க வேண்டியிருக்கும் போது, உங்கள் முழங்கால்களைப் பயன்படுத்தி முட்டு போட்டு குனிந்து தூக்கவும். கனமான பொருட்களை தூக்க இடுப்பிலிருந்து குனிய வேண்டாம்.
 • உறுதியான மெத்தையில் தூங்கவும்.
 • ஹை ஹீல் ஷூக்களை தவிர்க்கவும்.
 • புகைபிடிப்பதை நிறுத்துங்கள் மற்றும் புகைக்கு வெளிப்படுத்திக் கொள்வதை தவிர்க்கவும். புகைபிடித்தல் முதுகெலும்பு வட்டு சிதைவை ஏற்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. 
   

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIESArchive

Copyrights © NMC Pondy. All Rights Reserved