வறண்ட தொண்டைப் புண் - காரணங்கள் மற்றும் சிகிச்சை

Dec 29, 2023

தொண்டை புண் வர காரணம் என்ன?விழுங்கும் பொழுது உங்களுக்கு வலி ஏற்படுகிறதா? உங்கள் தொண்டை வறண்டு, அரிப்பு ஏற்படுவது போல இருக்கிறதா? சில சமயம் உங்கள் தொண்டை நிரந்தரமாக வறண்டு வீங்கியிருப்பது போல தோன்றலாம். இந்த மாதிரியான "வறண்ட தொண்டைப் புண்" மூன்றில் ஒருவரை அடிக்கடி பாதிக்கிறது. 

தொண்டை புண் வர காரணம் என்ன?

பின்வரும் காரணங்களினால் தொண்டைப் புண் ஏற்படலாம்:

  • சளி அல்லது காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள்
  • ஸ்ட்ரெப் ஏற்படுத்தும் பாக்டீரியா
  • ஒவ்வாமை, குறிப்பாக பருவகால ஒவ்வாமை மற்றும் தூசி அல்லது துகள் ஒவ்வாமை
  • புகைபிடித்தல் அல்லது புகைக்கு வெளிப்படுத்திக் கொள்ளும் சூழல்
  • இருமல் அல்லது குரல் நாண்களில் ஏற்படும் அழுத்தத்தால் தொண்டையில் ஏற்படும் காயங்கள்

தொண்டை புண்கள் தோன்றும் போது பொதுவாக அதனுடன் காணப்படும் சில அறிகுறிகள்:

மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல், இருமல், தும்மல், காய்ச்சல், குளிர், கழுத்து சுரப்பிகள் வீக்கம், உடல் வலி, தலைவலி, விழுங்குவதில் சிரமம் மற்றும் கரகரப்பான குரல் ஆகியவை. ஸ்ட்ரெப் பாக்டீரியாவின் காரணமாக தொற்று ஏற்பட்டால், வாயின் மேற்கூரையில் சிறிய சிவப்பு புள்ளிகள், சிவப்பான மற்றும் வீங்கிய டான்சில்கள் மற்றும் சீழ் நிறைந்த கொப்புளங்கள் ஆகியவை காணப்படலாம். உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் வேறு ஒருவருக்கோ விழுங்குவதில் சிரமம், அதிகப்படியான உமிழ்நீர், சுவாசிப்பதில் சிரமம், உமிழ்நீர் அல்லது சளியுடன்கூடிய இரத்தம், நீரிழப்பு அல்லது சொறி போன்றவற்றை ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும். 

வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் தொண்டைப்புண் பொதுவாக 5-7 நாட்கள் வரை நீடிக்கும். உங்கள் தொண்டைப்புண் காரணமாக ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள் இதோ:

  • தொண்டைக்கான வாயில்-அடக்கி வைக்கக்கூடிய மாத்திரைகளை (லோசன்ஜ்கள்) எடுத்துக் கொள்ளலாம். இவை வீக்கமடைந்த திசுக்களை சற்று குளிர வைக்கும். நரம்பு முடிவுகளின் வெப்பநிலை குறைக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் வலி சமிக்ஞைகள் குறைகின்றன.
  • சுத்தமான ஈரப்பதமூட்டி (ஹ்யுமிடிஃபையர்) அல்லது குளிர்ந்த மிஸ்ட் ஸ்ப்ரே தெளிப்பைப் பயன்படுத்தவும். சுற்றுச்சூழலின் கூடுதல் ஈரப்பதம் உங்கள் தொண்டையின் வறட்சி மற்றும் அரிப்புகளை போக்க உதவும். ஆனால் அவை சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - தொண்டைப் புண் ஏற்பட்டால் உங்கள் நோயெதிர்ப்புச் சக்தி குறைவதால் உங்களைச் சுற்றியுள்ள மற்ற தொற்றுநோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
  • சூடான உப்பு நீர் கொண்டு கொப்பளிக்கவும். உப்பு நீர் தொண்டை வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் உங்கள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லவும் உதவுகிறது.
  • சூடான பானங்கள் மற்றும் திரவங்களை நிறைய குடிக்கவும். இது எல்லாத் நோய்த்தொற்றுகளையும் அழிக்க உதவுகிறது, அத்துடன் வலி மற்றும் வீக்கத்தை போக்குகிறது. உங்கள் சூடான பானங்களில் சிறிது தேனைக் கலக்கிக் குடிக்கவும், உங்களுக்கு கூடுதல் டோஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும்! மூலிகைத் தேநீரும் நன்மை அளிக்கும். 

உங்கள் தொண்டைப்புண் அறிகுறிகள் சில நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்வது பரிந்துரைக்கப்படுகிறது. தொண்டைத் திசு மாதிரியினை சோதை செய்து, அதன் அடிப்படையில் மருத்துவர் நோயைக் கண்டறிவார். ஸ்ட்ரெப் பரிசோதனைக்காக, உங்கள் தொண்டையின் பின்புறத்தில் ஒரு துடைப்பான் மூலம் ஒரு மாதிரியை உங்கள் மருத்துவர் சேகரிப்பார். நோயறிதலை உறுதிப்படுத்த, அவர் ஒரு ஆய்வக சோதனை கூட செய்யலாம். ஆய்வக சோதனை முடிவுகள் பாசிட்டிவ்-ஆக இருந்தால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (ஆன்டி-பயாடிக்ஸ்) பரிந்துரைக்கப்படும். சில நேரங்களில், தொண்டை புண் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய கூடுதல் பரிசோதனைகள் செய்யப்படலாம் மற்றும் ஒரு ENT (காது-மூக்கு-தொண்டை நிபுணர்) மருத்துவரை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கலாம். 

இபுப்ரூஃபன், ஆஸ்பிரின் மற்றும் அசெட்டமினோஃபென் போன்று, மருந்துக் கடையில் மருத்துவரின் சீட்டின்றி எளிதில் கிடைக்கும் ஓவர்-தி-கவுன்டர் மருந்துகள் தொண்டை புண் வலியைப் போக்க பயன்படுத்தப்படலாம். இருமல் சிரப் மற்றும் தொண்டை புண் மரத்துப்போச் செய்யும் கிருமி நாசினி ஸ்ப்ரேக்கள் கூட உதவலாம். 

தொண்டை புண் மிகவும் பொதுவாகக் காணப்படும் நோயாகும், மேலும் இது தற்போது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனாலும், உங்களுக்கு அடிக்கடி தொண்டையில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்பட்டால், உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் இதோ:

  • பொது இடங்களில் முகமூடி அணியுங்கள்
  • உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும், குறிப்பாக கழிப்பறையைப் பயன்படுத்திய பின்பு மற்றும் சாப்பிடுவதற்கு முன்பு
  • சுவாசத் தொற்று, சளி அல்லது காய்ச்சல் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்
  • புகைபிடிக்காதீர்கள் மற்றும் புகைக்கு வெளிப்படுத்திக் கொள்வதைத் தவிர்க்கவும். 
     

Comments - 0

Share Your Thoughts

Verify you're Human*

Just check on this box below to verify

SEARCH

 

CATEGORIES



Archive

Copyrights © NMC Pondy. All Rights Reserved